logo

முகப்பு எங்களைப்பற்றி குறிக்கோள் படங்கள் தொடர்புக்கு விண்ணப்ப படிவம்






    குறிக்கோள் :



இன்றைய அவசரகால உலகில் குடும்பங்கள் பெரும்பாலாக தனிக்குடித்தனம் என்ற பெயரில் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதில்லை. இதனால் சொந்தபந்தங்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை. இந்த நிகழ்வுகள் தொடர்வதால்தான் மணப்பெண், மணமகள் தேடுவதில் அதிக சிரமங்களை நாம் எதிர் கொள்கிறோம். மேலும் பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் மட்டும் திருமண உறவுகள் பலப்படும் என்ற கற்பனையில் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பாதையில் செல்லும்போது திருமண வாழ்க்கை வெற்றியும் அதே நேரத்தில் தோல்வியையும் சந்திக்கின்றோம்.

அனைவரும் நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு நல்ல சொந்த பந்தங்களையும் மனதில் கொண்டு பொருளாதாரத்தை கடைசி தேர்வாக வைத்துக் கொண்டு திருமண உறவுகளை தேடுங்கள் நிச்சயமாக திருமண உறவுகள் வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த சோழிய வெள்ளாளர் மணமாலை இணையதளத்தின் நோக்கம் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தாமாக முன் வந்து இந்த இணையதளத்தின் வாயிலாக தங்கள் வீட்டில் திருமண வரன் இருப்பதை தெரிவிக்கலாம். இந்த தகவல் பரிமாற்றத்திற்கான வழியாகத்தான் இந்த சேவையை இலவசமாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இன்றும் நகரத்தார்கள் ( சிவகெங்கை மாவட்டம் காரைக்குடியில்) தைமாதம் முதல் செவ்வாய்க்கிழமை ( செவ்வாய் பொங்கல்) என்ற பெயரில் கோவிலில் செவ்வாய் பொங்கல் வைத்து பின் தங்கள் இனத்தில் பெண் மற்றும் மாப்பிள்ளை இருப்பதை ஒருவருக்கொருவர் தகவல் பரிமாரிக்கொண்டு திருமணத்தை முடிவு செய்கிறார்கள். இந்த நிகழ்விற்காக உலகில் எங்கிருந்தாலும் இந்த செவ்வாய் பொங்கல் அன்று ஒன்று கூடுகிறார்கள்.

இன்று அனைவரிடத்திலும் ஸ்மார்ட் மொபல்போன், இமெயில் முகவரி மற்றும் இண்டர்நெட் டேட்டா வசதிகளும் இருப்பதால் இதன்மூலம் மிக எளிதாக நம் உறவுகளிடம் உங்கள் தேவைகளை பரிமாரிக்கொள்ளுங்கள் எங்கள் இணையதளம் மூலமாக தொடர்புகொள்ளுங்கள்.

இந்த சேவைக்கு தேவைப்படும் தகவல்கள் பெற்றோர்கள் பெயர், முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி பெண், பையன் வயது மற்றும் படிப்பு குறிப்புகள் மட்டும் போதுமானது. தேவைக்கு நம் சமூகத்தினர்கள் தங்களை தொடர்புகொள்வார்கள். மேலும் உங்களுக்கு தேவையான தகவல்களை எங்களின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.



To view this site best Screen resoultion 1366 X 768 recommanded Landscape orientation display