logo

முகப்பு எங்களைப்பற்றி குறிக்கோள் படங்கள் தொடர்புக்கு விண்ணப்ப படிவம்






    எங்களைப் பற்றி :



எங்களது தாய் கழகமான குளோபல் சாப்ட் சொலுஷன்ஸ் - திருச்சி மாவட்டம் தமிழ்நாடு ( www.globalsoftsolutions.in) நிறுவனம் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இணையதள முகவரியை உருவாக்கியும் பின் வருடாந்திர பராமரிப்பையும் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் சமூக நலத் தூய்மை மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சானிட்டரி நாப்கின்ஸ் வெண்டிங்க் மெஷின் நாணயம் போட்டு நாப்கின்ஸை பெறும் இயந்திரம் மற்றும்உபயோகப்படுத்திய நாப்கின்ஸை அறிவியல் ரீதியாக அப்புறப்படுத்தும் இயந்திரங்களை பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களுக்கு இவ்வியந்திரங்களை விற்பனையும் விற்பனைக்கு பிந்தைய பராமரிப்பையும் செய்துவருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய பெற்றோர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பெண் மற்றும் மாப்பிள்ளை தேடும் படலம்தான். இதனை எளிமைப்படுத்த இந்த மாதிரியான சேவையை நமது சொந்தங்களின் திருமண நிகழ்வின் மூலம் தொடங்கியுள்ளோம். இந்த சேவைக்கு நமது சமூகத்தினர் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து அடுத்த கட்டத்திற்கு இந்த சேவையை எடுத்துச் செல்லலாம் என உள்ளோம். மேலும் இந்த சேவையில் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.



To view this site best Screen resoultion 1366 X 768 recommanded Landscape orientation display